U19 உலக கோப்பை; ஹெனில் படேல் பந்து வீச்சில் சுருண்ட அமெரிக்கா; இலகு வெற்றி பெற்ற இந்தியா...! - Seithipunal
Seithipunal


19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று தொடங்கியது. "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, இன்று தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா அணி, ஹெனில் படேல் பந்து வீச்சில் சுருண்டது. 107 ரன்னில் மட்டுமே எடுத்த அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

108 ரன்கள் என்ற இலகு வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிய இந்திய அணியின், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 04 ஓவரில் 01 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்த போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது. 

மழை நின்றவுடன், மீண்டும் இந்திய அணி, ஆட்டத்தை தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பாக, வைபவ் சூர்யவன்ஷி (02), வேதாந்த் திரிவேதி (02), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா அணி,  17.2 ஓவரில் 04 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India easily defeated the USA in their first match of the U19 World Cup


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->