குகேஷ் இடம் தோல்வி! பெரும் வலியை கொடுத்தது - மனம் திறந்த கார்ல்சன்! - Seithipunal
Seithipunal


நோர்வே செஸ் போட்டியின் 6-வது சுற்றில், உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 19 வயதான தமிழக வீரர் டி.குகேஷ் வீழ்த்தினார்.

போட்டிக்குப் பிறகு கார்ல்சன், டேபிளை குத்தியவாறே குகேஷுடன் கைகுலுக்கி, அவரை பாராட்டினார். பின்னரும் அவரது முதுகை தட்டிச் செல்லும் நெகிழ்ச்சியான காட்சி வெளியாகி ரசிகர்களை பாதித்தது.

நடந்தது என்ன? கிளாசிக்கல் செஸ் போட்டியில் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்திய குகேஷ், ஏற்கனவே அவரிடம் முதல் சுற்றில் தோல்வியடைந்த நிலையில், அந்தக் குறைபாட்டை துல்லியமாக திருத்தினார். 

சுமார் 4 மணி நேரம் நீடித்த போட்டியில் கார்ல்சன் வெற்றியின் விளிம்பில் இருந்த போதும், திடீர் தவறான நகர்வு ஒன்றால் பின்னடைவை சந்தித்தார். அந்த தருணத்தை சரியாகக் கையாண்ட குகேஷ் வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், தனது ஆக்ரோஷமான செய்கை குறித்து விளக்கமளித்துள்ள கார்ல்சன், "குகேஷ் சிறப்பாக விளையாடினார். அவர் இளம் வயதிலும் போராடும் மனப்பாங்கும், நேர்மறையான அணுகுமுறையும் கொண்டவர். 

அந்த ஆற்றலே, நகர்வுகளின் தரத்தையும் விட உயர்ந்தது. இப்போதெல்லாம் அவர் நகர்வுகள் தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன. இதை ஏற்க வேண்டும்.

ஆனால், கிளாசிக்கல் செஸ் எனக்கு பிடிக்கவில்லை. இனி இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது குறித்து யோசிக்க வேண்டிய நேரம் இது. பிளிட்ஸ், ரேபிட் போன்ற போட்டிகள் தான் எனக்குப் பொருத்தமானவை,” என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் பகிர்ந்தார்.

மேலும், இதுபோன்ற தோல்விகள் தான் மிகுந்த வலியளிக்கின்றன என்றும், இத்தொடர் சிறிது வித்தியாசமாக நடந்திருக்க வேண்டியதுதான் எனவும் அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chess magnus carlsen open up that incident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->