கனடாவில் டிக் டாக் செயலிக்கு தடை.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல சமூக வலைதளமான டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில நாடுகளும் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளன. இந்தத் தடை மக்களின் பாதுகாப்புக்கு கருதி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடா அரசு இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சி.என்.என். அறிக்கையில், "அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து டிக்டாக் செயலியை நீக்கப்படுவதாகவும், அதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக கனடா அரசு செயலகத்தில் கருவூல வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். அதேபோல், பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

canada government banned tik tok


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->