கணவனை நாயாக பாவித்து வாக்கிங்... ஊரடங்கு விதிமுறையை மீறியதால், ஆப்படித்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் ஒருமாத (நான்கு வாரம்) இரவு நேர ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால், கனடாவில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணியுடன் நடைப்பயிற்சி செல்லும் நபர்களுக்கு ஊரடங்கில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகரில் இருக்கும் ஷெர்ப்ரூக் பகுதியை சார்ந்த பெண்மணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர், தனது கணவரை நாய் போல பாவித்து நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை செய்கையில், " என்னுடைய செல்ல பிராணியுடன் நடைப்பயிற்சி செல்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அரசின் அறிவிப்பை அலட்சியமாக நினைத்து இருவரும் மீறியுள்ளேர்கள் என்று குற்றம் சாட்டிய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Canada girl went Walking Offence Nighttime Lockdown Rules like Husband act Dog


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->