பிரேசில் கலவரம்: ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்தார் அதிபர் லுலா டா சில்வா.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபராக பொறுப்பேற்றார்.

ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த போல்சனேரோ, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

மேலும் அதிபர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அரசாங்க கட்டிடங்களை சூறையாடியனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் அரசாங்க கட்டிடங்களை சூறையாடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதற்காக இராணுவத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்திய பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஜனாதிபதி மாளிகை காவலில் இருந்த 40 வீரர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் இராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்குப் பதிலாக தென்கிழக்கு இராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brazil President Lula sacks army commander for riots


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->