திரைப்படத்தை விஞ்சும் நிஜ அனகோண்டா.. பதைபதைப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டில் இருக்கும் ஆற்றில் அனகோண்டா பாம்புகளை கைகளால் பிடிக்க முயற்சி செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

உலகளவில் பெரும் ஆபத்தான மற்றும் விசமில்லாத, ஆளையே விழுங்கும் பாம்பில் அமேசான் பாம்புகள் பெரும் புகழ் வாய்ந்தவை. இவை குறித்த பல படங்களை பார்த்து நாம் பதறியிருப்போம். தென்னமெரிக்க நாடுகளில் இந்த வகையான பாம்புகள் அதிகளவில் காணப்படுகிறது. 

பிரேசில் நாட்டின் அமேசான் காட்டில் உள்ள அனகோண்டா பாம்புகள் நீர் நிலைகளில் வாழ்ந்து தனது இரையை பிடித்து உட்கொள்ளும் தன்மையை கொண்டது. இந்நிலையில், கடந்த 2014 ஆம் வருடத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இது குறித்த வீடியோ, பிரேசில் நாட்டில் உள்ள சண்டியா மரியா ஆற்றங்கரையில் சிர்லே ஒலிவிர்யா என்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் பெக்டினோ போர்ப்ஸ், நண்பர் ரோட்டாரிகா சாண்டோஸ் ஆகியோர் படகில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நேரத்தில், 17 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பொன்று தென்படவே, அதன் வாளை பிடித்து இழுத்துள்ளனர். இதில் படகு தாறுமாறாக சுழன்ற நிலையில், பாம்பை விட்டுவிட கூறி பகலில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். இதன்பின்னர் பாம்பை விட்டவுடன் அது விரைந்து செல்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brazil Anaconda Snake Capturing Video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->