5 வயது சிறுவனால், விபத்திலிருந்து மீண்ட அதிசயம்.! குட்டி பையனின், வியக்கவைத்த செயல்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த நோவ் வுட்ஸ் என்ற சிறுவன் தன்னுடைய தாய், தந்தையர் மற்றும் உறவினர்கள் உட்பட 8 பேரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 

அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த நோவ் வுட்ஸ்சின் வீட்டில் வழக்கம் போல அனைவரும் உறங்க சென்று இறுகின்றனர். அனைவரும் உறங்க சென்ற பின்பு வீட்டில் தீப்பிடித்து இருக்கின்றது. இவ்வாறு தீப்பிடித்து விட்டதை முன்னதாகவே அறிந்து கொண்ட நோவ் சாமர்த்தியமாக செயல்பட்டு இருக்கின்றான்.

 தனது தங்கையையும், செல்ல நாய்க் குட்டியையும் உடனடியாக ஜன்னல் வழியாக வெளியேற்றி இருக்கின்றான். அதன் பின்னர் பக்கத்து அறையில் உறங்கி கொண்டு இருந்த தன்னுடைய உறவினர்களை சென்று எழுப்பி உஷார் செய்து இருக்கின்றான்.

பின்னர், அவர்கள் நோவ் வுட்ஸுடன் வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து இருக்கின்றனர். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு, துரிதமாக செயல்பட்ட சிறுவனை பாராட்டி விருது வழங்கி இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy protest his family while fire on house


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal