கேரளாவில் ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் புகார்...! - போலீசார் தீவிர விசாரணை இன்று கைது...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில் மீதான பாலியல் புகார்கள் சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது முன்பு பல புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், கட்சி நடவடிக்கை எடுத்து அவரை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண், மின்னஞ்சல் மூலம் கேரள முதல்வருக்கு புகார் அளித்து, ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் என்றும், மதிப்புமிகு பொருட்களை மோசடியாகப் பெற்றவர் என்றும், கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தியவர் என்றும் கூறினார்.

இது ராகுலுக்கு எதிரான மூன்றாவது புகார் ஆகும்.அதன்பேரில், மாநில அரசு போலீஸ் டி.ஜி.பிக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணை குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று, பாலக்காட்டில் உள்ள ஓட்டலில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தனிப்படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

விசாரணைக்குப் பிறகு, இன்று அதிகாலை அவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்து, அவரது செல்போன்களும் கைப்பற்றப்பட்டு பத்தனம்திட்டாவில் உள்ள ஆயுதப்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது.

அங்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும், போலீசார் கூறுகையில், இந்த பெரும் அளவிலான விசாரணை ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நடக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

harassement complaint against Rahul Mamkootathil Kerala Police conducting intensive investigation arrest expected today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->