நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி; கோலி, கில் அபாரம்; ராகுலின் நிதானத்தினால் இந்தியா அபார வெற்றி..!
India won the ODI match against New Zealand by 4 wickets
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 05 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இன்று போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

போட்டியில், 50 ஓவர்களின் முடிவில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவித்தது. வெற்றி இலக்காக 301 ரன்களை விரட்டி, விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 06 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்து 04 விக்கெட்டுகள் மற்றும் 06 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்கள் எடுத்து சத்தத்தை தவறவிட்டார். கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்குமிடையிலான 02-வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
English Summary
India won the ODI match against New Zealand by 4 wickets