எச்சரிக்கை! பிரச்சனை தீரும் தருவாயில் ஈரானை தாக்குவது பொருத்தமற்றது...! நெதன்யாவுக்கு அதிபர் டிரம்ப்
Attacking Iran when problem about resolved inappropriate President Trump to Netanyahu
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் நாட்டை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.இதில் அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார்.

இதுத்தொடர்பாக டொனால்ட் டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து," ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெதன்யாகுவிடம் தெரிவித்தார்.
இதில் ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இருப்பினும், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் தெரிவித்தது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Attacking Iran when problem about resolved inappropriate President Trump to Netanyahu