வங்கதேசத்தில் மற்றுமொரு இந்து இளைஞர் விஷம் கொடுத்து அடித்து கொலை..!
Another Hindu youth beaten to death in Bangladesh
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. அதன்படி, கடந்த 04 வாரங்களில் மட்டும் மொத்தம் 06 ஹிந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்து விஷம் கொல்லப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட கொலை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கடேஷ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜாய் மகாதே தன், என்ற இளைஞர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வியாழன்று நிகழ்ந்ததாகவும், ஜாய் மகாதே உள்ளூரில் உள்ள கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை அமிருல் இல்லாம் என்ற நபர் விஷம் கொடுத்து, அடித்து கொன்று விட்டதாகவும் ஜாய் மகாதே குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது திட்டமிட்ட கொலை, என்பதால், உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஜாய் மகாதே மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளது.
English Summary
Another Hindu youth beaten to death in Bangladesh