நியாய பயப்படுத்த முடியாத தாக்குதல்...! ரஷ்யா உதவி ஈரானுக்கு எப்போதும் உண்டு...!- புதின் - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி அதிகாலை இஸ்ரேல் நாடு, ஈரானிலுள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து, இன்று 11வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஈரானின் அணு உலைகள் மீது, அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.இந்த சூழலில்,இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சையது அப்பாஸ் அராசி ரஷ்யா சென்றுள்ளார். அவர் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஈரானுக்கு ஆதரவளிக்கும் வகையிலான கருத்துக்களை புதின் தெரிவித்தார்.

புதின்:

அவர் தெரிவிக்கையில்," ஈரான் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலை நியாயப்படுத்தவும் முடியாது. ஈரான் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ரஷ்யா தயாராக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An attack that cannot be justified Russias help to Iran always there Putin


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->