அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி - Seithipunal
Seithipunal


உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது ஆனாலும் கூட கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.79 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 21ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

அதன்பின்னர் அவர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓகானர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் பைடனுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை வெள்ளை மாளிகை தனது சுட்டுரைப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American president Joe Biden again affected covid positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->