காரில் பதுங்கி இருந்த ஏலியன்? கூகுள் எர்த்தில் பார்த்த பெண்.. வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


கூகுள் எர்த் செயலின் மூலமாக நாம் உலகின் எந்த இடத்தையும் சேட்டிலைட் மூலமாக நமது செல்போனில் பார்க்க முடியும். அப்படி அமெரிக்காவின் மெய்னி பகுதியைச் சேர்ந்த பேட்டர்சன் என்ற பெண்மணி வாகன பழுது பார்க்கும் கடையை கூகுள் எர்த்தில் தேடிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

காரணம் அவர் வாகன பழுதுபார்க்கும் கடையை பார்த்தபோது அங்கே ஒரு கார் ஓட்டுநர் ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்துள்ளார். அதன் பின் அவருக்கு பின்புற இருக்கையில் ஒரு உருவம் தெரிந்தது. அதை ஜூம் செய்து பேட்டர்சன் பார்த்தபோது வேற்று கிரகவாசி போல ஒரு உருவம் பதுங்கி இருந்தது. 

"அதை ஜூம் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது." என்று தெரிவித்துள்ளார். மேலும், அதை அவர் ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு காரின் பின் இருக்கையில் நான் பார்த்ததை என்னவென்று யாராவது கூற முடியுமா என்று தெரிவித்துள்ளார். 

இதை கண்ட பலரும் அது வேற்று கிரகவாசி தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சில நாட்களாகவே வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் பசுபிக் பெருங்கடலின் மேல் விமானம் பறந்து சென்றபோது வேற்றுகிரக வாசிகள் அந்த பகுதியில் தென்பட்டதாக விமான நிறுவனங்களில் பணியாற்றிய விமானிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america women saw alien in car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->