கல்வான் பள்ளத்தாக்கு கொடூரத்தை போல மற்றொரு தாக்குதல்.. ஆணையிட்ட சீன அதிபர்?.. பரபரப்பு தகவல்.!! 
                                    
                                    
                                   America Newspaper release news about another one galwan clash in India 
 
                                 
                               
                                
                                      
                                            லடாக் பகுதியில் இந்தியாவிற்கு எதிரான சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு, திட்டம் தீட்டிய நபர் சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் என்று அமெரிக்க பத்திரிகையில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் பிரபல நாளிதழான நியூஸ் வீக் கட்டுரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சீன அதிபர் ஜி ஜின்பிங், லடாக் பகுதியில் இந்திய நிலைகளுக்கு எதிராக மீண்டும் மற்றொரு தாக்குதலை மேற்கொள்ள சீன இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு மூளையாக இருந்து, திட்டத்தை செயல்படுத்திய ஜி ஜின்பிங் திட்டம் இந்திய இராணுவத்தால் தோல்வியை தழுவியது. இதனால் சீன அதிபர் மீண்டும் மற்றொரு தாக்குதலை அரங்கேற்ற இராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       America Newspaper release news about another one galwan clash in India