அமெரிக்காவே முதலில்...! - 75 நாடுகளின் குடியேற்ற விசாக்களுக்கு தற்காலிக தடை
America first Temporary ban immigration visas 75 countries
அமெரிக்காவின் பொது நலத்திட்டங்கள் மீது அதிக சுமையாக மாறக்கூடிய வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இந்த முடிவு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இடைநிறுத்த பட்டியலில் இலங்கை, வங்கதேசம், நேபாளம்,ஈரான், பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் ஆயிரக்கணக்கானோர் நிச்சயமற்ற சூழ்நிலையில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சார்ந்து வாழும் அபாயம் உள்ள குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
புதிய குடியேற்றவர்கள் நாட்டின் வளங்களை சுரண்டாதிருப்பது உறுதி செய்யப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்துள்ளது.
இதனுடன், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “புதிய குடியேற்றவர்கள் அரசின் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த விசா செயலாக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நலன்களுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்படும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
America first Temporary ban immigration visas 75 countries