ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கும் வழங்குவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனின் மிக முக்கிய நகரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போரினால் உக்ரைனில் 1000 கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு கப்பல் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களுக்கான சாதனங்கள் உள்ளிட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் முக்கியமான மருத்துவ பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றிற்கு மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் டாலர் தருவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America announces one billion worth of arms to Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->