பாகிஸ்தானோட.. நாங்க?... ஆப்கானிஸ்தானின் கலாச்சார ஆணைய உறுப்பினர் திட்டவட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுடன் பண வர்த்தக கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அண்டை நாடுகளுடன் கொள்ளும் பணப்பரிவர்த்தனை ஆப்கானிஸ்தானுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் தங்கள் வசம் கொண்டுவந்து, ஆட்சியை அமைந்துள்ளனர். அந்நாட்டின் அதிபர், துணை அதிபர் மற்றும் மந்திரிகள் போன்றோர் அறிவிக்கப்பட்டுள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய விவகாரத்திற்கு, பாகிஸ்தான் தனது பெரும் ஆதரவை தெரிவித்தது. 

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உட்பட அனைத்து பரிமாற்றங்கள் செய்யவும் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாகிஸ்தானின் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாவ் கத்தரின் நிதிக்குழு இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உறுதியானது. 

இதுதொடர்பாக ஷாவ் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் வர்த்தக உறவு உறுதியானால், பணபரிமாற்றத்தின் போது பாகிஸ்தான் பணத்தை உபயோகம் செய்யலாம். இது வெளிநாட்டு பணத்தை சேமிக்க உதவும், பணத்தை வலுப்படுத்த உதவும் என்று தெரிவித்தார். 

இந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானின் கலாச்சார ஆணைய உறுப்பினர் அகமதுல்லா வாசிக், " பாகிஸ்தானுடன் பண வர்த்தக கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அண்டை நாடுகளுடன் கொள்ளும் பணப்பரிவர்த்தனை ஆப்கானிஸ்தானுடையதாக இருக்கும். ஆப்கானிய மக்களின் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த முடிவையும் தலிபான்கள் எடுக்காது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghanistan Reject Pakistan Trade relationship Money Using Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->