மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்.. பதைபதைப்பு கண்ணீர் வீடியோ காட்சிகள்.!! கொந்தளிக்கும் இந்தியா..!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்களின் வசம் வைத்துக்கொண்டு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பல கொடூர தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களை ஒழிக்க அரசு படையும், அமெரிக்கா நாட்டின் தலைமையிலான நேட்டோ படைகளை தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் மீது பல அதிரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வசம் இருக்கும் கிராமத்தை அரசு மீட்டு வருகிறது.

இதனால் இவர்கள் இருதரப்பிற்குள்ளும் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் பகுதியில் அமைத்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் மேற்கொண்டுளள்னர். 

இந்த துப்பாக்கிசூடு தாக்குதலில் பிறந்த இரண்டு குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் நர்ஸுகள் உட்பட 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் அரங்கேறிய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan hospital terrorist attack 2 born child and 14 peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal