மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்த பெண்! - Seithipunal
Seithipunal


மீன்களை நெக்லஸ் போலவும் மேலாடையாகவும் நூலில் கோர்த்து ஒரு பெண் அணிந்துள்ளார். இணையத்தில் பார்வையாளர்களிடம் இந்த வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ஈர்க்கப்பட்டு உள்ளது.

புதுபுது ஆடைகளை  "பேஷன் ஷோ" விழாக்களின் மூலம் தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால் தற்போதைய நிலையில், தங்களுக்கு பிடித்த வகையில் ஆடைகளை, மிக ஆர்வமுள்ள சில பேர் தானே விதவிதமாக தயாரித்து அதனை அணிந்து இணைய தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களிடம் லைக், கமெண்ட் அதிகமாக அள்ளிவிடுகின்றனர்.

அந்த வகையில்,  ஒரு மாடலிங் பெண் ஒருவர் , மீன்களை கோர்த்து உடையாக்கி இணையதளத்தில் பார்வையாளர்களை தன்பக்கம் கவனத்தை ஈர்த்து உள்ளார். அந்த பெண் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து ஆடையாக அணிந்துள்ளார். அந்த மீன் ஆடையை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் பேஷன்ஷோ செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இநிலையில், தனது கழுத்து பகுதியில் மீன்களை நெக்லஸ் போல செய்து அணிந்துள்ளார். பின்னர், ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, அதில் தனக்கு ஏற்றவாறு கைப்பைபோல மாற்றி கொண்டு தூக்கி வருவது இணையதளத்தில் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும்,  இந்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி 51 லட்சம் பார்வையாளர்கள் ரசிக்கப்பட்ட நிலையில், நெட்டிசன்கள், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman dressed as a fish on a thread


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->