அமெரிக்க பெண் கொலை; 'குற்றவாளிகளை நேசிக்கிறேன், போலீசை வெறுக்கிறேன்’: பலாத்காரம், கருக்கலைப்பு, சோசலிசத்தை ஆதரிக்கிறேன்'; சர்ச்சையை கிளம்பியுள்ள ஸ்வீடன் பாப் பாடகி..!
A Swedish pop singer has sparked controversy by saying she supports the culprit and hates the police in the case of the American womans murder
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றத் துறை அதிகாரி சுட்டதில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், 'குற்றவாளிகளை நான் நேசிக்கிறேன், போலீசாரை வெறுக்கிறேன்' என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜாரா லார்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களைப் இந்த சம்பவத்திற்கு எதிராக பதிவிட்டு வருகிறார். அதில், 'நான் அகதிகள், திருநங்கைகள் மற்றும் குற்றவாளிகளை நேசிக்கிறேன். அதேசமயம் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளை (ஐசிஇ) வெறுக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், 'பலாத்காரம், கருக்கலைப்பு, சோசலிசம் போன்றவற்றை ஆதரிக்கிறேன்' என்றும் அவர் பட்டியலிட்டுள்ளமை ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, குற்றவாளிகளை ஆதரிப்பதாகக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு ஜாரா லார்சன் பின்னர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, 'வன்முறையற்ற போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளையே நான் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டேன். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது காதலன் கூட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியதால் அமெரிக்கா வர முடியவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் அதிகாரிகள்தான். கொலை மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளை விட, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எவ்வளவோ மேல் என்று அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
A Swedish pop singer has sparked controversy by saying she supports the culprit and hates the police in the case of the American womans murder