தனது காதலி ஓட்டப் பந்தய வீராங்கனை மீது தீவைத்து எரித்த காதலன்! - Seithipunal
Seithipunal


உகாண்டா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலில் 75% தீக்காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இவர் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டியில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா நாடு திரும்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து கென்யா நாட்டில் மேற்கு Trans-Nzoia County மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் அவர் ஓய்வில் இருந்துள்ளார். 

இந்நிலையில் வீட்டில் இருந்த ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

வாய்த்தகராறு முற்றிய நிலையில் அவரது காதலன் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் இதனால் அவரது உடலில் 75% தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலனுக்கும்  தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A lover who set fire to his girlfriend, a runner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->