காங்கோவில் கோர விபத்து.. 193 பேர் நீரில் மூழ்கி பலி! - Seithipunal
Seithipunal


வடமேற்கு காங்கோவில் இந்த வாரம் நிகழ்ந்த இரண்டு தனித்தனியான படகு விபத்துகளில் குறைந்தது 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போன நிலையில், உயிரிழந்தவர்களின் முழு விவரங்களை அரசு வெளியிடவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முதல் விபத்து கடந்த புதன்கிழமை ஈக்குவேட்டர் (Equateur) மாகாணத்திலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் நிகழ்ந்தது. ஆற்றில் சென்ற மோட்டார் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை இதுவரை அரசு அறிவிக்கவில்லை.

இரண்டாவது விபத்து வியாழக்கிழமை லுகோலேலா பகுதியில் நடந்தது. சுமார் 500 பயணிகளுடன் சென்ற படகு திடீரென தீப்பற்றி பின்னர் கவிழ்ந்தது. மீட்பு நடவடிக்கையில் 209 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் பலர் உயிரிழந்ததுடன், இன்னும் சிலர் காணாமல் போயுள்ளனர்.

இரண்டு விபத்துகளிலும் மொத்தம் 193 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் வெளியிடப்படவில்லை.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அங்கு சாலைப் பயணத்தை விட மலிவானதாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் படகில் பயணிக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததும், கூடுதல் எடை ஏற்றப்படுவதும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A horrific accident in Congo 193 people drowned


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->