விபரீத செல்பி ஆசை.. விரைந்து வந்த அலை.. கதறிய கணவன்.. அலறிய பெண்.. பகீர் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


திருமணம் முடித்த தம்பதிகள் மற்றும் திருமணம் நடைபெறவுள்ள தம்பதிகள் தங்களின் வாழ்நாளில் என்றென்றும் நிலைத்து நிற்க கூடிய புகைப்படங்களை எடுப்பதிலும், சேகரிப்பதில் அதிகளவு ஆர்வம் காண்பித்து வருவார்கள். 

இந்தியாவிலும் திருமண நிகழ்ச்சிகளில் வித விதமான சைகைகளுடன் எடுக்கப்படும் புகைப்படங்கள், கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் புகைப்படங்கள் என பல வகையான புகைப்படங்கள் எடுத்து சிறப்பிக்கப்படும். 

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியாவில் வசித்த வரும் தம்பதிக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தம்பதிகள் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு வந்து புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். 

இதில், தம்பதிகள் கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ள பாறையின் மீது நின்றுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவே, கடற்கரை அலை பெண்மணியை இழுத்து சென்று, கணவரை கதற வைத்துள்ளது. 

பெண்மணி கடலுக்குள் அடித்து செல்லப்படுவதை கண்ட கடற்கரை அதிகாரிகள், விரைந்து சென்று பெண்மணியை மீட்டு வந்தனர். பெண்மணி தற்போது நலமுடன் இருக்கும் நிலையில், விபரீத புகைப்பட ஆசை உயிரை காவு வாங்க தெரிந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl Trapped in ocean tide during capture photo with his man in California


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal