கொலம்பியா: சிறிய ரக விமானம் மெடலின் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். 

மத்திய கொலம்பியாவின் ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. இதையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் காற்றில் அடர்த்தியான கறுப்பு புகையை உமிழ்ந்த வண்ணம் இருந்ததால் அப்பகுதி ரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மெடெலின் மேயர் டேனியல் குயின்டெரோ அறிக்கையில், விமானம் புறப்படும் போது இன்ஜின் செயலிழப்பை சந்தித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக, விமானியால் விமானத்தை உயரத்தில் வைத்திருக்க முடியவில்லை என்பதால் விமானம் இந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது என்றார்.

மேலும் ஏழு வீடுகள் இடிந்தது என்றும், ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 Killed in Small Plane Crashes Into Residential Area In Colombia


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->