இலங்கையில் கோர விபத்து: அந்தரத்தில் அறுந்த கேபிள் கார்: இந்திய உள்பட 07 புத்த பிக்குகள் பலி..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நிகவெரட்டி அருகே மெல்சிறிபுர - நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தியானம் செய்வதற்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தின் போது 13 புத்த துறவிகள் தியானம் செய்வதற்காக மலை உச்சியில் உள்ள தியான மண்டபத்திற்கு மேலே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அப்போது அந்தரத்தில் சென்ற கேபிள் கார் பெட்டியின் கேபிள் திடீரென அறுந்து விபத்துள்ளாகியுள்ளது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து, மரத்தில் பலமாக மோதியுள்ளது. அப்போது,  இந்தியாவைச் சேர்ந்த புத்த பிக்கு உள்பட 07 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 06 பேரில் 04 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில், உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவை சேர்ந்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது கேபிள் காரில் பயணித்த மொத்தம் 13 பிக்குகளில் இருவர் அதிலிருந்து குதித்து தப்பியுள்ளனர். காயமடைந்த ஏனைய ஆறு பிக்குகளும் குருணாகலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 உயிரிழந்த பௌத்த பிக்குகளின் விபரங்கள் பின்வருமாறு:

01. வணக்கத்திற்குரிய மல்வானேகம சமித்தி தேரர் - (47 வயது)
02. வணக்கத்திற்குரிய நாவலப்பிட்டியே உத்தரானந்த தேரர் - (27 வயது)
03. வணக்கத்திற்குரிய நுகேகொட விபஸ்ஸி தேரர் - (37 வயது)
04. இந்திய பிரஜையான வணக்கத்திற்குரிய தம்மகவேசி தேரர் - (31 வயது)
05. வணக்கத்திற்குரிய உடவளவே ​சந்தசுமண தேரர் - (59 வயது)
06. ருமேனிய பிரஜையான வணக்கத்திற்குரிய தம்மரங்சி தேரர் - (48 வயது)
07. ரஷ்ய பிரஜையான வணக்கத்திற்குரிய தம்மரக்கித தேரர் - (48 வயது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 Buddhist monks killed in cable car accident in Sri Lanka


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->