#சீனா || இரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனா ஷாங்டாங் மாகாணத்தின் பீஜிங் லியோசெங் பகுதியில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்திப் பகுதியில் நேற்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர் உள்ளூர் மருத்துவமனையில் சிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று லியோசெங் உயர் தொழில்நுட்ப மண்டல மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in blast at chemical plant in China


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->