உகாண்டாவை உலுக்கிய கோர சம்பவம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து; 46 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்..!
46 killed in head on collision between buses in Uganda
உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சாலைகள் பொதுவாக குறுகியதாகவே இருக்கின்றதால், அங்கு அடிக்கடி கோர விபத்து நிகழ்கிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகவே உள்ளது. கடந்த 2023-இல் மட்டும் உகாண்டாவில் சாலை விபத்து காரணமாக 04 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் இன்று உகாண்டாவின் கிர்யான்டோங்கோ என்ற இடத்தில் குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் சென்று கொண்டிருந்த இரண்டு பஸ்களும் முன்பு சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதில் ஏனைய வாகனங்களும் மோதிக்கொண்டன.

இந்த சம்பவத்தில், 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முதலில், படுகாயமடைந்தவர்கள் சிலர் மயக்கமடைந்து காணப்பட்டதால், அவர்களை இறந்தவர்களின் கணக்கில் சேர்த்து 63 பேர் உயிரிழப்பு என போலீசார் அறிவித்தனர்.
ஆனால், இதன் பிறகு அவர்களை பரிசோனை செய்ததில் சிலர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 46 என போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் உகாண்டாவை உலுக்கியுள்ளது.
English Summary
46 killed in head on collision between buses in Uganda