திருமண உறவில் ஈடுபட்ட 43 ரஷ்ய வீரர்கள்..! 
                                    
                                    
                                   43 russia soldiers married 
 
                                 
                               
                                
                                      
                                            உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதியிலிருந்து ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 
இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. 
மேலும், உக்ரைன் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். 
இந்நிலையில் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 43 வீரர்களுக்கு மாஸ்கோ நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. 
அந்த திருமணத்தில், ராணுவ உடையணிந்தபடி கலந்து கொண்ட ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர். இந்த திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       43 russia soldiers married