கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 4 வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பெண் ராணுவ வீரர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் ஆல்டோ மற்றும் மீடியோ பௌடோ பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு உணவு கொண்டு வர ஹெலிகாப்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது குயிப்டோ பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ராணுவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ, அவசரநிலையைச் சமாளிக்கவும், என்ன நடந்தது என்பதற்கான காரணங்களை ஆராயவும் உடனடியாக அப்பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக சோகோ துறையின் (மேற்கு கொலம்பியா) கவர்னர் ஃபார்லின் பெரியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed in army helicopter crashes in Colombia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->