முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை!
20 years in prison for the former Prime Minister
முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் சாட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சக்ஸஸ் மஸ்ரா ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்து வந்தார்.41 வயதான இவர் தற்போது அங்கு எதிர் கட்சியாக உள்ளார்.பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றபோது இந்தக் கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார்.இதையடுத்து அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாமத் டெபி அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார்.இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.இதனால் அங்கு அரசியல் மோதல் போக்கு நிலவியது.
இதனையடுத்து கடந்த மே மாதம் லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில்விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர்.இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் . இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் மஸ்ராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸ்ரா இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
20 years in prison for the former Prime Minister