20 போர் விமானங்கள்... 90 ஏவுகணைகள்...! - சிரியாவில் ஐஎஸ் தளங்களை தகர்த்த அமெரிக்கா...!
20 fighter jets 90 missiles US destroys ISIS bases Syria
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளங்களை குறிவைத்து, அமெரிக்கா அதிரடியாக வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சுமார் 35 பயங்கரவாத இலக்குகளை நோக்கி 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்தப் போர்த் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வான்வழித் தாக்குதல்கள் சிரியாவின் எந்த பகுதிகளில் நடத்தப்பட்டன, அதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதற்கான முழு விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும், ஐஎஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையங்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
20 fighter jets 90 missiles US destroys ISIS bases Syria