வங்காளதேசம் : சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி, 30 பேர் காயம் - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

வங்காளதேசம் ஷிப்சர் மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது காலை 7.45 மணியளவில் மதரிபூரின் பங்கபந்து விரைவுச் சாலையில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஷிப்சார் உபாசிலா சுகாதார வளாகம் மற்றும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர் மதரிபூரைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 killed 30 injured in bus accident in Bangladesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->