தமிழ்நாட்டில் பறவை காய்ச்சலா? ஆரணி அருகே 350 கோழிகள் உயிரிழப்பு.!! 
                                    
                                    
                                   350 chicken died in arani thiruvannamalai
 
                                 
                               
                                
                                      
                                            கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகே வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன. 
அதேபோன்று தமிழ்நாட்டில் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பறவை காய்ச்சல் பரவல் காரணமாக முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள புது பாளையத்தில் சுமார் 350 கோழிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கடந்த சில நாட்களாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் கோழிகள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       350 chicken died in arani thiruvannamalai