சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்துராஜ் பவர்பிளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய சிவம் துபே முதல் பந்திலே அட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ஜடேஜாவும் 2 ரன்க்கு ஆட்டமிழந்தார்.

சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர் பெர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரூசோ 23 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் மற்றும் ஷஷாங் இருவரும் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கட்டை இழந்து 163 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அணி விளையாடிய 10 போட்டிகளில் 4 வெற்றியையும் 6தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab team won by defeating Chennai team


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->