அரியலூர் || தாய் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் மாயமான சிறுமி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதியின் மகன் அன்புதுரை. இவர் அரியலூர் பகுதியை சேர்ந்த பதினெட்டு வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்புதுரையை கைது செய்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட சிறுமியும், அவரது தாயும் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை உள்பட மூன்று பேரையும் கடந்த 28-ந்தேதி இரவு பத்து மணியில் இருந்து காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்று பெரிய மடையன் ஏரிக்கரையின் ஓரத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பச்சிளம் குழந்தையை தாய், மகள் இருவரும் சேர்ந்து கொன்று புதைத்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kill baby in ariyalur jayankondam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->