தாய்லாந்தில் வேன் பயங்கர விபத்து - 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மத்திய தாய்லாந்தில் வேன் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு அம்னாட் சாரோன் மாகாணத்தில் இருந்து 12 பேருடன் வேன் ஒன்று பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ​ அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நாகோன் ராட்சசிமா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இதையடுத்து சிறுது நேரத்திலேயே வேன் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் வேனில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் தனச்சித் கிங்கேவ் என்ற 20 வயது இளைஞர் மட்டும் அதிர்ஷ்டவசமாக வேனிலிருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளார். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை கர்னல் யிங்யோஸ் போல்டேஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 killed in van accident in Thailand


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal