வங்கதேச கலவரம் : பத்திரமாக நாடு திரும்பிய 1000 இந்திய மாணவர்கள்..!! - Seithipunal
Seithipunal



வங்கதேசம் - பாகிஸ்தானுக்கு இடையேயான சுதந்திர போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை எதிர்த்து, அங்கு நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஜூலை 14ம் தேதி போராட்டம் நடத்தியவர்களை அவமதிக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்திய வங்கதேச மாணவர்கள், பல இடங்களில் வன்முறையைக் கையில் எடுத்தனர். 

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கலவரத்தை அடக்க, போலீசார் மற்றும் ராணுவத்தினை ஈடுபடுத்தியுள்ளார். நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப் பட்டதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய வங்கதேசத்தில் உள்ள நர்ஸிங்டி சிறையை முற்றுகையிட்டு தீவைத்துக் கொளுத்திய போராட்டக்காரர்கள், சிறையில் இருந்த கைதிகளையும் விடுவித்தனர். இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் "இதுவரை வங்கதேசத்தில் இருந்து 998 மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். மேலும் அங்கு இன்னும் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வருகின்றனர். 

அவர்களுடன் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முழு தொடர்பில் இருப்பதோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 Indian Students Returns Safely to India From Bangladesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->