பாகிஸ்தானில் சோதனைச் சாவடியில் பயங்கரவாத தாக்குதல்; 06 ராணுவ வீரர்கள் மற்றும் 02 பயங்கரவாதிகள் பலி..!
06 soldiers and 02 terrorists killed in terrorist attack at checkpoint in Pakistan
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில், ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் 06 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 04 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இவர்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தால் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில், ஆப்கான்- பாகிஸ்தான் இடையில் மோதல் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
06 soldiers and 02 terrorists killed in terrorist attack at checkpoint in Pakistan