இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது...? - வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!
Which districts going experience heavy rain today Latest update from Meteorological Department
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, கடலோர கர்நாடக பகுதிகளில் இருந்து கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு உகந்த சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (09-06-2026)
தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (10-06-2026)
தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பம் காரணமான அசௌகரியம்
வட கடலோர தமிழகம் மற்றும் வட உள் மாவட்டங்களில் வெப்பநிலையும் காற்றின் ஈரப்பதமும் அதிகரித்து காணப்படுவதால், சில இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு என்ன வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக பொதுமக்கள் அசௌகரியத்தை உணரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மொத்தத்தில், வெயிலும் மழையும் மாறி மாறி தாக்கம் செலுத்தும் வானிலை நிலை அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Which districts going experience heavy rain today Latest update from Meteorological Department