மீனவர்களுக்கு எச்சரிக்கை! இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன?
Warning fishermen Which districts likely receive heavy rain today
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிக்கை வெளியிட்டதில் குறிப்பிட்டதாவது,"வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக, இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ராணிப்பேட்டை,திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது " என்று தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தமாடுகிறது.
மேலும் மீனவர்களுக்கு எச்செரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல வேணாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
Warning fishermen Which districts likely receive heavy rain today