திடீர் மழை அப்டேட்: 4 மாவட்டங்களில் மதியம் 1 வரை மழை வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்
Sudden rain update Chance of rain in 4 districts till 1 pm Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் ,"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது.இதனால், இன்று தமிழகத்தில் வடக்கு திசையில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில் தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
English Summary
Sudden rain update Chance of rain in 4 districts till 1 pm Meteorological Department