கர்நாடகாவில் சிவப்பு எச்சரிக்கை! குறிப்பாக 7 மாவட்டங்களுக்கு...!
Red alert in Karnataka Especially for 7 districts
இந்தாண்டு முன்கூட்டியே கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில்,அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக இந்தாண்டில் 4-முறை மேட்டூர் அணை நிரம்பியது.இதனிடையே,கடந்த சில தினங்களாக மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து வந்தநிலையில், கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதிலும் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்த மழையினால், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.இதன் காரணமாக இந்த அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 50000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகாவிலுள்ள குடகு, சிவமொக்கா, உடுப்பி, ஹாசன்,சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடாஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (red alert )விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,அங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளது.
English Summary
Red alert in Karnataka Especially for 7 districts