மக்களே உஷார்: தமிழகத்தில் 02 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 03 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
Red alert for 02 districts in Tamil Nadu Orange alert for 03 districts
பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் (மே 26) அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்(மே25), நாளையும் (மே 26)அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு, சென்னையில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
English Summary
Red alert for 02 districts in Tamil Nadu Orange alert for 03 districts