4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
Rain will occur 4 districts in tamilnadu
கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain will occur 4 districts in tamilnadu