மக்களே உஷார்.. தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை.!
rain in 22 districts at tamilnadu
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருபத்து இரண்டு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain in 22 districts at tamilnadu