சென்யார் புயலின் ஆற்றல் சீனக் கடல் நோக்கி...!ஆனால் டெல்டா, சென்னை மீது மழை நோக்கி...! - Seithipunal
Seithipunal


மலாக்கா வளைகுடா – சென்யார் எனப்படும் புயல் உருவாகியிருந்தாலும் அது இந்தோனேசியாவை கடந்து செல்லும் போதே சக்தி குறைந்து சிதறி விட்டது. அதன் எச்சத் தாக்கம் மட்டுமே தென் சீனக் கடலுக்கு நகர்ந்ததால், அந்த அமைப்பால் தமிழ்நாட்டில் மழை உருவாகும் வாய்ப்பு இல்லை என வானிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதே நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை – இந்தியப் பெருங்கடல் மண்டலங்களில் உருவாகி இருந்த தீவிர தாழ்வழுத்த மண்டலம் இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் மேலும் ஒழுங்குபடுத்து‌ப்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் நிலையில் உள்ளது.

மேலும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை அது தீவிர குறைந்த காற்றழுத்த மண்டலமாகவும், அதே இரவு வட இலங்கைக்கு அருகிலான கடல் பரப்பில் புயலாகவும் உருவாகும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என டெல்டா வானிலை நிபுணர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்பின், இம்மண்டலம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி (சனிக்கிழமை) காவிரி டெல்டா கடற்கரை பகுதிகளை முதலில் தொட்டுச் செல்லும் வகையில் வலுப்பெறும் என்றும், அப்போது அதன் முன்பரப்பு நிலப்பரப்பைத் தாண்டி நுழையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக அது வடக்கு நோக்கிப் பயணித்து 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னை அருகே கரையை கடக்கவோ அல்லது கரையை ஒட்டி நிலைநிற்றலாகவோ வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் மேலும் குறிப்பிட்டார்.

இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் 30ஆம் தேதி காலை வரை, மேலும் சனிக்கிழமை (29ஆம் தேதி) முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்கள் கன-மிக கனமழை முதல் சில இடங்களில் அதி கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

புயல் நிலப்பரப்புக்கு அருகே உருவாகுவது காரணமாக கடும் காற்றுத் தாக்கம் ஏற்படாது. எனினும், மழை மண்டலம் தீவிரமடையும் சாத்தியம் மிக அதிகமாக இருப்பதாகவும் நிபுணர் துல்லியமாக மதிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

power Cyclone Senyar heading towards China Sea But rain heading toward Delta and Chennai


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->