'அச்சம் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையா இருங்க'...! - விழுப்புரம், கடலூரில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று (அக். 18) இரவு முதல் நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வடமாவட்டங்களில் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், நேற்று பெய்த மழையைப் போன்ற தீவிரம் இன்றைய மழையில் இருக்காது என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம், கடலூரில் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம்
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களைக் காட்டிலும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No need to panic but be careful Rain intensity likely increase Villupuram Cuddalore


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->