வடகிழக்கு பருவமழையின் தீவிரம்; முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு..!
Chief Minister Vijay reviews rain preparedness measures at Ripon Building
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. நேற்று சென்னையில், பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் புகுந்து ஆறுபோல ஓடியது. இன்றும் பல இடங்களின் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், தலைமைச்செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இன்று (18.10.2026) ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று சென்னையில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
English Summary
Chief Minister Vijay reviews rain preparedness measures at Ripon Building