நெல்லை–தென்காசி நடுக்கத்தில்! கனமழை ‘ஆரஞ்சு அலர்ட்’...! - மீட்பு படைகள் அதிரடியாக தயார் நிலையில்...! - Seithipunal
Seithipunal


நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (திங்கள்) அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், இரு மாவட்டங்களிலும் ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னெச்சரிக்கையாக, 26 வீரர்கள் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை அணி அதிவேகமாக நெல்லை நோக்கி விரைந்து வந்து, அண்ணா விளையாட்டு மைதானத்தில் தற்காலிக முகாம் அமைத்து தயார் நிலையில் நிற்கிறது.

வெள்ளப்பெருக்கு அல்லது அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக செயலில் இறங்குவதற்காக கயிறுகள், உயிர்க்காப்பு கருவிகள், வெட்டியந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் முன்கூட்டியே ஆயத்தமாக வைத்துள்ளனர்.

மேலும், 28 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையும் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளது.தாமிரபரணி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், கருப்பந்துறை, மேலநத்தம், சீவலப்பேரி, குப்பக்குறிச்சி சிப்காட் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்வரத்து அதிகரித்தால் போக்குவரத்துக்கு தடைவிதிக்க தேவையான தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு பொருட்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நிரம்பிய நீர்நிலைகள், ஆறு கரைகள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் அருகே சென்று செல்பி எடுக்கவும், குளிக்கவும் முயலக்கூடாது.மின்சாரம் தடைபடும் வாய்ப்பு உள்ளதால் மெழுகுவர்த்தி, டார்ச் லைட் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.பழைய கட்டிடங்கள், சிதிலமடைந்த வீடுகள், மரங்களின் கீழ் மழையில் தஞ்சமடைய வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், விழுந்த மின்கம்பி, சேதமடைந்த பாலம், கட்டிடம் போன்றவற்றை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077, 0461-2501070 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

அத்துடன் “வணக்கம் நெல்லை” வாட்ஸ்அப் எண்: 97865 66111 மூலம் புகைப்படங்கள், தகவல்களை அனுப்பலாம். வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் பெற ‘TN Alert’ செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கவும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai Thenkasi state shock Heavy rains Orange Alert Rescue teams alert


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->